Also Watch
Read this
By: Manigandan Raja

மேட்டுப்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தங்கரத திருத்தேரோட்டம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசத்தி பெற்ற வைணவ திருத்தலமான தென் திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
நவராத்திரி பிரம்ம உற்சவம் கடந்த திங்கட்கிழமை துவங்கி பெரிய சேஷ வாகனம், அன்னபக்ஷி வாகனம், சிம்ம வாகனம், முத்து பந்தல் கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்த நிலையில் ஆறாம் நாளான இன்று காலை அனுமந்த வாகனம் நடைபெற்றது.
இதன் பின்னர் மாலை தங்கரத திருத்தேரோட்டம் நடைபெற்றது..மலையப்ப சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரின் வடம் பிடித்து இழுக்க திருவீதி உலா நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved