Also Watch
Read this
By: Fyrose Banu

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் எதிரில் உள்ள ஆற்றங்கரை புதிய பாலம் அருகே வசிப்பவர் செல்வம். இவரது மனைவி உண்ணாமலை. இவர்கள் தனியார் பள்ளி அருகே ஜெராக்ஸ் கடை வைத்துள்ளனர். இந்த நிலையில் வேலை சம்பந்தமாக செல்வம் சென்னைக்கு சென்றுள்ளார் அவரது மனைவி உண்ணாமலை ஜெராக்ஸ் கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது தாயார் கண்ணம்மாள் வயது 75 . இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவரும் மதியம் வீட்டை பூட்டிக்
கொண்டு கடைக்கு சென்றுள்ளார்

பின்னர் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த சுமார் 60 கிலோ இரும்பு சட்டங்கள் மற்றும் கொடியில் காய வைத்திருந்த சேலை பாவாடை பெண்ட் சட்டை வேஸ்ட்டி உள்ளிட்ட துணிகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வீடு பூட்டிக்கிடந்ததை பார்த்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். தங்கம் இருக்குமோ. பணம் இருக்குமோ.. என்ற ஆர்வத்தில் அங்கு இருந்த பீரோவை திறக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் முடிய வில்லை. மேலும் ஆட்கள் வருவதை அறிந்து அவர்கள் கைக்கு கிடைத்தது லாபம் என்று அங்கிருந்த இரும்பு சட்டங்களையும், துணிமணிகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

சென்னையில் இருந்து திரும்பிய செல்வம் இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வீட்டில் திருடன் முயன்ற திருடர்கள் கொடியில் காய வைத்திருந்த துணிகளை அள்ளிச் சென்றுள்ள சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved