Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 11:53 AM
By: Fyrose Banu

18 வயது நிரம்பியோர் உட்பட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிருஷ்ணன்கோவில் தனியார் கல்லூரியில் 18 பிளஸ் என்ற வடிவத்தில் கல்லூரி மாணவர்கள் நின்று நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
18 பிளஸ் என்ற வடிவில்...
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் தனியார் கல்லூரியில் வருவாய் துறை ஏற்பாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 18 வயதுடையவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி 18 பிளஸ் என்ற வடிவில் கல்லூர் கல்லூரி மாணவர்கள் நின்று நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், மற்றும் வத்திராயிருப்பு வட்டாட்சியர் சரஸ்வதி, தனி வட்டாட்சியர் வானதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved