news-tamil-logo

3/18/2026, 11:29:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஜனநாயக முறையில் விவாதம் தேவை - கார்கே வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

ஜனநாயக முறையில் விவாதம் தேவை - கார்கே வலியுறுத்தல்

மாநிலங்களவை, டெல்லி

Posted on: Mar 18, 2026 09:33 AM

2

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
today parliment

நாடாளுமன்றத்தில், பொது மக்களின் பிரச்சனைகள் குறித்து ஜனநாயக முறையில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, பதவிக்காலம் முடிந்த மாநிலங்களவை உறுப்பினர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தி உள்ளார்.

பிரியா விடை பெற்ற எம்பிக்கள்
இந்தியாவில், 10 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 37 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், மாநிலங்களவையில், பதவிக் காலம் நிறைவடைந்த உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு, இன்று மார்ச் 18ஆம் தேதி நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டு உறுப்பினர்களை பாராட்டி பேசினர்.

நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள், நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற பெரும் ஆர்வத்துடன் இருப்பதால் அவர்கள் சோர்வு அடைவதில்லை, ஓய்வும் பெறுவதில்லை. நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைகள் குறித்து ஜனநாயக முறையில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும்

தேவகவுடா குறித்து கலகலப்பு
சுமார் 54 ஆண்டுகளுக்கு மேலாக, தேவகவுடாவை எனக்கு தெரியும். அவருடன் இணைந்து நிறைய தருணங்களில் பணியாற்றி இருக்கிறேன்.
என்னுடன் அன்பை பரிமாறிய அவர், ஏனென்று தெரியவில்லை, மோடியை திருமணம் செய்துகொண்டார்.
இவ்வாறு கார்கே பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

26
10 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved