news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
tv

Also Watch

tv

Read this

மஞ்சள் மஞ்சள் மஞ்சள்

சேலம்

8

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
manjal

ஆத்தூரில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.7.39 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த வாரங்களைக் காட்டிலும் மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், அரியலூர், தம்மம்பட்டி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர்,உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,229 விவசாயிகள் 8,394 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ரூ.7.39 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்

ஆத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 18 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 14,569 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 17,609 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 13,169 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 15,559 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 25,689 அதி பட்சமாக 33,555 ரூபாய் விலை போனது. 8,394மஞ்சள் மூட்டைகள், மொத்த குவிண்டால் 5,026.04 மூலம் ரூ.7 கோடியே 39 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Related Link
கட்டி 10 வருஷம் ஆச்சு...

ஆனா இன்னும் திறக்கல

கட்டி 10 வருஷம் ஆச்சு... ஆனா இன்னும் திறக்கல


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
5 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved