Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 09:59 AM
By: Fyrose Banu

கிருஷ்ணகிரியில் மூளைச்சாவு அடைந்த தினகரன் செய்தியாளர் உடல் உறுப்புகள் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் அரசு மரியாதை செலுத்தினார்.
மூளைச்சாவு அடைந்த தினகரன் நாளிதழ் செய்தியாளர்
காவேரிப்பட்டினத்தில் தினகரன் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்தவர் அன்பரசன் (54). இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவர் பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதிக ரத்தம் வெளியேறிய காரணத்தால் சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார்.
உடல் உறுப்புகள் மருத்துவக்கல்லூரிக்கு தானம்
இதையடுத்து அவரது உடல் மீண்டும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் அவரது உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று இரவு அன்பரசனின் உடல் உறுப்புகள் மருத்துவக் கல்லூரி தானமாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.தினேஷ் குமார், மருத்துவக் கல்லூரிக்கு வந்து அன்பரசன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர். அவருடன் மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினரும் அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved