டெல்லியில் நடைபெற்ற Udyog Samagam 2025 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்க வணிகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா தனது வணிக ஒப்பந்தங்களில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுடன் சமரசம் செய்யாது என்று கூறினார். மேலும், அமெரிக்காவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டு வருவதாக கூறினார். அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் நாளை,அடுத்த மாதம்,அடுத்த ஆண்டு என எப்போது வேண்டுமானால் நடக்கலாம் என பியூஸ் கோயல் கூறினார்.