Also Watch
Read this
சட்டப்பேரவையில் பேசும்போது, தமது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என, முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் பதிவு
இதுதொடர்பாக, முதல்வரும் தவெக தலைவருமாக விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது தானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புண்படுத்தி இருந்தால்...
ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved