இன்ஸ்டாகிராமில் பெண்கள் ஆபாசமாக டான்ஸ் ஆடுவதை விடவா உலகத்தில் வேறு அடிக்சன் இருக்கப் போகிறது என இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளது சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள "பாட்டல் ராதா" படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் இவ்வாறு பேசினார். தான் கல்லூரியில் குடித்துவிட்டு பாடிய பாடலுக்கு தொடர்ந்து 3 முறை பரிசு கிடைத்ததாகவும், குடி இருக்கும் போது வாழ்க்கை சந்தோசமாகவும், நம்பிக்கையாகவும் இருந்ததாக பேசிய மிஷ்கின் குடி அடிக்சன், கேட்ஜட் அடிக்சனை விட இன்ஸ்டாகிராம் அடிக்சன் அதிகரித்துள்ளதாக கூறினார்.