news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
tv

Also Watch

tv

Read this

ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்

119 எம்.பி.க்கள் கையெழுத்து

36

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை எனக் கூறி 119 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத் தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி, ஞாயிறன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிப்ரவரி 4ஆம் தேதி, பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.

ஓம்பிர்லா பேச்சால் அதிர்ச்சி
இந்த நிலையில், “பிரதமர் மோடியை நான் தான் வர வேண்டாம் என்று கூறினேன்” என்று, அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதனால், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பின. காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி.க்கள் அவமதிக்கப்பட்டதாக கூறி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

நம்பிக்கை இல்லா தீர்மானம்
இந்த நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நீக்கக் கோரி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இன்று பிப்ரவரி-10ஆம் தேதி, நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 119 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படவில்லை, 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மீதான அவதூறு ஆகியவற்றுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங். பெண் எம்.பி.க்கள் மீது புகார்
அவைத்தலைவர் ஒம் பிர்லா கூறியதாவது:
மக்களவையில் சில எம்.பி.க்கள் முறையற்ற முறையில் நடந்து கொண்டனர். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்த பிரதமர் மோடி மக்களவைக்கு வருவதாக இருந்தார். அவர் வருவதற்கு முன்பாக, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பிரதமர் இருக்கையைச் சுற்றி வளைத்திருந்தனர். பிரதமரின் உரையின்போது, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யலாம் என்று, எனக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது.

அரசியல் கருத்து வேறுபாடுகள் நாடாளுமன்ற அவைக்குள் கொண்டுவரப்பட்டதில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்கள், பிரதமரின் இருக்கைக்குச் சென்று எதிர்பாராத ஒரு சம்பவத்தை நிகழ்த்தக்கூடும் என எனக்கு நம்பகமான தகவல் கிடைத்தது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது தேசத்தின் கண்ணியத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். அதனால்தான், நடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என பிரதமரை நான் கேட்டுக்கொண்டேன். இது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.
இவ்வாறு அவைத்தலைவர் ஓம்பிர்லா கூறி இருந்தார்.

Related Link
அதிகரிக்கும் கஞ்சா கலாச்சாரம்

அதிகரிக்கும் கஞ்சா கலாச்சாரம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கலைஞர் கனவு இல்ல பயனாளி உடன் முதல்வர் சந்திப்பு

3
9 mins agoshare
கலைஞர் கனவு இல்ல பயனாளி உடன் முதல்வர் சந்திப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved