Also Watch
Read this
Posted on: Oct 07, 2024 08:24 AM
By: Srini Vasan

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.
106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 18 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved