Also Watch
Read this
Posted on: May 06, 2025 12:40 PM
By: Srini Vasan

திமுகவை வீழ்த்தி விட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையால் சிலர் தவிப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பதாக அதிமுக பாஜக கூட்டணியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
மேலும் திமுக பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பொதுக்கூட்டங்களில் பயன்படுத்திடக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
திமுக அரசின் சாதனைகளும் அதன் பயன்களும் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved