news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுக்கு ஐசிசி அபராதம்
tv

Also Watch

பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுக்கு ஐசிசி அபராதம்

மகளிர் ஆசிய கோப்பை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாத்திமா சனா

இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது தவறான சைகை

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனையை அவமதித்ததற்காக பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஷெபாலி வர்மா அவுட்டானார்.

அப்போது, ஷெபாலியை அவமதிக்கும் வகையில் அவரை நோக்கி சனா தவறான சைகைகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஐசிசி, பாத்திமா சனாவுக்கு போட்டிக்கான கட்டணத்தில் 10 சதவீதம் அபாராதம் விதித்து உத்தரட்டுள்ளது.

இந்திய வீராங்கனையின் பாலினத்தை கேலி செய்த பாக் ரசிகர்கள்

இந்தியா பாகிஸ்தான் மகளிர் ஆசியக் கோப்பை போட்டியின்போது, இந்திய வீராங்கனை Kranti Goud-ன் பாலினத்தை கேலி செய்யும் வகையில் சில பாகிஸ்தான் ரசிகர்கள் ஆபாசமாக பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வீராங்கனையின் பாலினம் மற்றும் தோற்றம் குறித்து இழிவான கருத்துகள் பேசிய சிலர், குறிப்பாக அப்பெண்ணை பார்த்து, அவர் ஒரு ஆண் என்று திரும்பத் திரும்பக் கூறியது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஸ்பெயின் லா லிகா கால்பந்து தொடர்

ஸ்பெயின் லா லிகா கால்பந்து தொடரில், வாலென்சியாவை பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. லமின் யமால் இரண்டு கோல்களும், ஃபெர்மின் லோபஸ், ரபின்ஹா மற்றும் பெட்ரி தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா, தொடரில் தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தொடர்கிறது.

Related Link
மகளிர் ஆசிய கோப்பை லீக் போட்டி வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை

மகளிர் ஆசிய கோப்பை லீக் போட்டி வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜப்பான் அணிக்கு எதிராக டி20-யில் விளையாடும் இந்தியா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved