news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது
tv

Also Watch

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது

ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹோர்முஸ் நீரிணை

அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு

ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்த அவரது பதிவில், ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவர தான் முயற்சிப்பதாக கூறப்படுவதை நிராகரித்தவர், ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்குள் தள்ளுவதில் தனக்கு விருப்பமில்லை என்றார்.

ஈரானின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் தவிர்க்க முடியாத ஒரு சூழலை எதிர்கொண்டு கொண்டிருப்பதாகவும் கூறியவர் தற்போதைய நிலையையே தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு நெருக்கடி

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, பெற்றோர் தங்களின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையை நிரூபிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இது பிறப்புரிமைக் குடியுரிமைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

சிவில் விமான பயணத்துக்கு ஆபத்தாக மாறிய ரஷ்ய வான்வெளி

ரஷ்ய வான்வெளி தற்போது பொதுமக்கள் விமானப் பயணத்திற்கு மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி  தெரிவித்துள்ளார். உக்ரைனின் ட்ரோன்கள் தொடர்ந்து ரஷ்ய வானில் பறந்து வருவதால், ரஷ்ய வான்வெளி பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாகவும், விமான நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Related Link
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 163 இந்தியர்கள் மீட்பு

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 163 இந்தியர்கள் மீட்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

‘ராஜன் வகையறா’ படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved