தமிழ்நாடு

மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனையில் திடீர் சோதனை

மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனையில் திடீர் சோதனை

மதுரையில் திமுக எம்.எல்.ஏவின் உறவினரான மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனையில் ஐந்தரை மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மதுரை கேகே நகர் பகுதியை சேர்ந்த மருத்துவர் எஸ்.சக்திமோகனின் வீடு மற்றும் அவரது குமரன் கிளினிக்கில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு 11.50 மணி வரை நீடித்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர் எஸ்.சக்திமோகன் இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

00 Comments

Leave a comment