தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்தார்

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்தார்

மதுரையில் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் வேட்பாளர் டாக்டர் சரவணன் பிரச்சாரத்தின் போது சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்தனர். மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர். சரவணன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் வைகைச் செல்வன் உடன் பழங்காநத்தம், அக்ரகாரம், நேரு நகர், மாடக்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த முன்னாள்அமைச்சர் செல்லூர் ராஜூ, சிலம்ப கலைஞரிகளின் வேண்டுதலுக்கு இணங்க சிலம்பம் சுற்றி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார்.
 

00 Comments

Leave a comment