தமிழ்நாடு

சத்திரம் விமான ஓடுதளத்தில் சோதனை ஓட்டம்.. பேரிடர் காலங்களில் ஓடுபாதையை பயன்படுத்த திட்டம்

தமிழக கேரள எல்லை குமுளி அருகே சத்திரம் விமான ஓடுதளத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கி விமானப்படையினர் சோதனை மேற்கொண்டனர். இடுக்கி மாவட்டம் குமுளி வண்டிப்பெரியார் அருகே சத்திரம் பகுதியில், என்.சி.சி ஏர்விங் கேடட்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் விமான ஓடு தளம் அமைப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள சத்ரம் விமான ஓடுபாதையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மாவட்ட நிர்வாகம், என்.சி.சி மற்றும் அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், விமானப்படை ஹெலிகாப்டர் கொண்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் சில பரிந்துரைகள் என்சிசிக்கு வழங்க பட உள்ளதாக கேப்டன் தெரிவித்தார்.

00 Comments

Leave a comment