தமிழ்நாடு

சென்னை மாதவரத்தில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

சென்னை மாதவரத்தை  சேர்ந்தவர்கள் மோகன் வனிதா-தம்பதி. இவர்களுக்கு 12 வயதில் மகள் ஒருவர் உள்ளார். சென்னை பெரம்பலூரில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவரிடம் மோகன் தவணை  முறையில் வட்டிக்கு பணம் வாங்கியிருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து  தினந்தோறும் அவர் தவணை முறையில் அந்தோணி ராஜை வீட்டிற்கு வரவழைத்து பணம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உறவினர்களின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதாக  மோகனும், வனிதாவும் சென்றுள்ளனர். தவணை பணத்தை தங்களது மகளிடம் கொடுத்துவிட்டு சென்றதாகவும் அதனை பெற்றுக்கொள்ளும்படியும் அந்தோணி ராஜிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பணத்தை வாங்குவதற்காக வந்த அந்தோணி ராஜ் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் சிறுமி கூச்சலிடவே அந்தோணி ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளார். இது குறித்து  பெற்றோரிடம் சிறுமி தெரிவித்த தகவலின் அடிப்படையில் அந்தோணி ராஜ் மீது மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அந்தோணி ராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

00 Comments

Leave a comment