Big Stories

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு தெய்வம் வடிவில் நீதி உள்ளதற்கு சான்று -ஜெயக்குமார்

அதிமுகவின் 52வது துவக்க நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  துறைமுகம் தொகுதி ராஜாஜி சாலையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின் மக்களுக்கு உணவு மற்றும் 100 ரூபாய் வழங்கினார்.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, எடப்பாடியாரின் பெயரில் தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றோம். 

அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்புவோம் என திமுக அரசு கூறியது. ஆனால், இன்றளவும் நிரப்ப வில்லை.

அதிமுக ஆட்சி காலத்தில் 3.5 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பப்பட்டது.

அதோடு அனைத்து அரசு துறைகளிலும் அதிமுக ஆட்சியில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது.

பத்தாண்டு காலத்தில் ஏறக்குறைய 10 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டது.
வருடத்திற்கு 1 லட்சம் அரசு வேலை வழங்குவதாக கூறிய தி.மு.க அதை நிறைவேற்றவில்லை.

மா. சுப்ரமணியன் ஓட்டப்பந்தய வீரராக ஒரு வாய்ச்சொல் வீரராக மட்டுமே உள்ளார். துறையை ஆய்வு செய்து முறையாக கவனிக்கவில்லை.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு தலைவிரித்து ஆடுகிறதுடு, ஒருவித மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. சுகாதாரம் சீர்கேட்டு உள்ளது.

மருத்துவமனையில் நோய்க்கு சரியான மருந்துவம் வழங்கப்படவில்லை

தவறான முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய அளவில் நிலைமை உள்ளது

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்காதது தெய்வம் நீதி வடிவில் உள்ளதை சான்றாக காட்டியுள்ளது. ஊரை அடித்து உலையில் போட்டவருக்கு இந்தநிலைமைதான் வரும்.

நீட் முழுமையான ரத்து என கூறியதும் மாணவர்கள் மத்தியில் நீட் வரவே வராது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது இதுவே தற்கொலைக்கு காரணமாகும்.
இந்த கையால் ஆகாத விடியா அரசே மாணவர்கள் தற்கொலைக்கு காரணம்.பொய்யை மூலதனமான கொண்ட கட்சி தி.மு.க

கல்விக் கடன் ரத்து எனக் கூறிவிட்டு ஏதும் செய்யாமல் ஏமாற்றி வருகிறது இந்த விடியா அரசு
விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது கண்ணதாசன் கூறியது தி. மு.காக்கு பொருந்தும்.
உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாத வெங்காயத்தை போல உள்ள அரசு இந்த அரசு

அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது அது எல்லா விஷயத்திலும் பொருந்தும்

இயற்கையை சுரண்டி கொள்ளை அடித்துக் கொண்டிருக்ககூடிய இந்த திமுக அரசு விரைவில் கம்பி எண்ணக் கூடிய காலம் வரும்..- ஜெயக்குமார்.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு  தெய்வம் வடிவில் நீதி உள்ளதற்கு சான்று -ஜெயக்குமார்

00 Comments

Leave a comment