தமிழ்நாடு

தரங்கம்பாடி: விளையாட்டு போட்டியின்போது மாணவன் உயிரிழப்பு - உறவினர்கள் மறியல்

தரங்கம்பாடி அருகே தடகள போட்டியில் பங்கேற்ற 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவிழந்தநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்-நித்யா  தம்பதி. இவர்களின் மூத்த ரிஷிபாலன் செம்பனார்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அரசு சார்பில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டி  சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. இதில் ரிஷிபாலன் கலந்து கொண்டுள்ளார்.  

400மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் ஓடிய ரிஷிபாலன் மைதானத்தில் மயங்கி சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக ரிஷிபாலனை பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ரிஷிபாலன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  சம்பவம் அறிந்து வந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களுக்கு முன்னரே தகவல் அளிக்கவில்லை எனவும், இதற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என கூறி மருத்துவமனை முன்பாக  மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உரியளித்ததன் பேரில்  சாலை மறியல் கைவிடப்பட்டது.

00 Comments

Leave a comment