Big Stories

அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் கார்த்திகை மாத அம்மாவாசை ஊஞ்சல்
உற்சவ விழா வெகு விமர்சியாக நடைபெற்றது

நள்ளிரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேங்காயில் கற்பூர தீபம்
ஏந்தி மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்
பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும்

இத்திருகோயிலில் நேற்று இரவு கார்த்திகை மாதம் அம்மாவாசை ஊஞ்சல் உற்சவ விழா
வெகு விமர்சியையாக நடைபெற்றது வடக்குவாசல் எதிரேயுள்ள ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில்
நடைபெற்றது.

அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால்,
தயிர்,இளநீர்,தேன் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பலவகை
மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபராதனையும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் நள்ளிரவில் பம்பை மேளதாளம் முழங்க
வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் தர்பார் அலங்காரத்தில் ஊஞ்சல்
மண்டபத்தில்
எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்

அச்சமயம் ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
அங்காளம்மா தயே.! அருள் புரிவாயே.!! என கரகோஷத்துடன் தேங்காயில் கற்பூர தீபம்
ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

நள்ளிரவில் நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழாவில் தமிழக பக்தர்கள்
மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கலந்து கொண்டனர்

லட்சக்கணக்கான பக்தர்கள் அமாவாசை ஊஞ்சல் உற்சாகத்து வருகை தந்ததால் 500க்கும்
மேற்பட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பக்தர்கள்
மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கலந்து கொண்டனர்

லட்சக்கணக்கான பக்தர்கள் அமாவாசை ஊஞ்சல் உற்சாகத்து வருகை தந்ததால் 500க்கும்
மேற்பட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ  விழா   திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு

00 Comments

Leave a comment