Big Stories

ஐயப்பன் கோயிலில் உத்திர நட்சத்திர விசேஷ பூஜை மலர் அலங்காரத்தில் காட்சியளித்த ஐயப்ப சாமி

போடிநாயக்கனூரில் 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையும் பிரசித்தியும் பெற்ற ஐயப்பன்
கோவிலில் உத்திர நட்சத்திர விசேஷ பூஜை நடைபெற்றது.

ஐயப்பனுக்குரிய முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் உத்தர நட்சத்திரத்தில்
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்தனர்*

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயப்ப ஆலயம்
உள்ளது .

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஐயப்ப நாளையத்தில் உள்ள ஐயப்பன்
விக்ரகம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் விக்கிரகத்துடன் சேர்த்து
உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐயப்பனுக்கு உரிய சிறப்பான நாளாக கருதப்படும் உத்திர நட்சத்திர
நாளில் ஐயப்பனுக்கு திருமஞ்சனம் மஞ்சள் பச்சரிசி பால் பன்னீர் தேன் போன்ற 16
வகை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வீட்டிற்கும் ஐயப்பனுக்கு லட்ச தீபம்
பஞ்சாட்சர தீபம் போன்ற தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
 

ஐயப்பன் கோயிலில் உத்திர நட்சத்திர விசேஷ பூஜை  மலர் அலங்காரத்தில் காட்சியளித்த ஐயப்ப சாமி

00 Comments

Leave a comment