தமிழ்நாடு

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வரும் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். அதனை ஈடு செய்யும் வகையில் மே மாதம் 11ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார். அழகர் மலையில் வீற்றிருக்கும் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து, வைகை ஆற்றில் எழுந்தருளும் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு வரும் 21ஆம் தேதி மாலை தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்படும் கள்ளழகர், 22ஆம் தேதி இரவு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை சூடிக் கொண்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு 23ஆம் தேதி அதிகாலையில் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
 

00 Comments

Leave a comment