தமிழ்நாடு

மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் பாதிக்கப்படவில்லை- ஒபிஎஸ்

மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் பாதிக்கப்படவில்லை- ஒபிஎஸ்

பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் எந்தப் பகுதியிலும் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து பிரிவை சேர்ந்த பொதுமக்களும் நல்ல வரவேற்பு அளித்தனர் எனவே தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறினார்.
 

00 Comments

Leave a comment