சினிமா

லியோ திரைப்படத்திற்கு திரும்பும் பக்கமெல்லாம் சிக்கல் | Leo


ரிலீஸ் செய்தால் பான் இந்தியா தான் என ஒரே பிடியாக இருக்கிறார் லியோ திரைப்பட தயாரிப்பாளர் லலித் குமார். ஆனால், லியோ படத்துக்கு திரும்புகிற பக்கமெல்லாம் கன்னி வெடி வைத்ததுபோல பிரச்சினைகளும் சூழ்ந்துகொண்டே உள்ளன.

ஏற்கனவே, தெலுங்கு-கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் லியோவுக்கு போட்டியாக முக்கிய நடிகர்களின் படம் வெளியாகவுள்ள நிலையில், இப்போது இந்தியில் லியோ திரைப்படம் முக்கியமான மல்டிபிளக்ஸ் மால்களில் வெளியாகுமா என்ற கல்வி உருவாகியுள்ளது.

லியோ திரைப்படத்தை இந்தியில் வெளியிடும் கோல்டுமைன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு வட இந்திய மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள், தியேட்டர் ரிலீஸுக்கு 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடி ரிலீஸ் செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும், 4 வார இடைவெளி என்பது தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறி, 8 வார இடைவெளி இல்லையென்றால் லியோ படத்தை தங்களது எந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரிலும் வெளியிடமாட்டோம் என கூறிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள நெட்ப்ளிக்ஸ் நிறுவனம், லியோ தயாரிப்பாளர் லலித்குமாருடன் 4 வார இடைவெளியில் ஒளிபரப்பலாம் என ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்காகத் தான் இந்தப் படத்தை 100 கோடிக்கும் மேலாக விலை கொடுத்து வாங்கியது நெட்பிளிக்ஸ்.

எனவே, இந்தியில் தியேட்டரில் வெளியாகி 8 வாரம் கழித்து தான் லியோ ஓடிடி-யில் வெளியாகும் என ஒப்பந்தம் போடவில்லை என்றால் இந்தியில் லியோ வெளியாவதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வட இந்திய மாநிலங்களில் நல்ல எதிர்பார்ப்புடன் உள்ள லியோ மல்டிபிளக்ஸ்களில் வெளியாகவில்லை என்றால் பான் - இந்தியா அளவிலான வசூல் குறையும் சூழல் உருவாகும்.

00 Comments

Leave a comment