தமிழ்நாடு

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ரவீந்திரநாத்துக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு என்ற காரணத்தை கூறி மனைவி ஆனந்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி ரவீந்திரநாத், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

00 Comments

Leave a comment