தமிழ்நாடு

அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு செல்லும் பிரதான சாலையில் மாடர்ன் தியேட்டர்
அருகே ஏற்காடு சாலையிலிருந்து மிக வேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை
இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது.
மின்னல் வேகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக கடைக்கு முன்பாக நிறுத்தி
இருந்த இருசக்கர வாகனங்களை இடித்துச் சென்று கடையின் படிக்கட்டின் மீதும் மோதி
நின்றது.வேகமாக வந்த கார் கடைக்குள் நுழைவதற்கு முன்பாக கடைக்கு வெளியே இருந்த
வாலிபர் சிலர் நூலிலையில் உயிர் தப்பினர்.இந்த விபத்து குறித்த காட்சிகள்
அருகில் இருந்த கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது.
அந்த சிசிடிவி காட்சிகளில் வேகமாக வந்த கார் இருசக்கர வாகனங்களை இடித்து
தள்ளிக்கொண்டு கடைக்குள் நுழைவது வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஒருவர் உயிர் தப்பிய காட்சிகளும் பதிவாய் இருப்பது பரபரப்பை
ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த கன்னங்குறிச்சி
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.இந்த காரில் வந்து விபத்தை ஏற்படுத்திய வாலிபருக்கு
காயம் ஏற்பட்டது தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

00 Comments

Leave a comment