தமிழ்நாடு

கோவில் திருவிழாவில் இரு சமூக இளைஞர்களிடையே தகராறு

கோவில் திருவிழாவில் இரு சமூக இளைஞர்களிடையே தகராறு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கோவில் திருவிழாவில் இரு சமூக இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் தங்கள் தரப்பு இளைஞர்களை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பிரிவினர், எதிர் தரப்பு இளைஞர் ஒருவரை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர். கறம்பக்குடி அடுத்த வெள்ளாள விடுதியில் 4 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவில் இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற அதிரான்விடுதியை சேர்ந்த மாதவன், பாக்யராஜ் ஆகியோரை எதிர்தரப்பினர் வழிமறித்து தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் மழையூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற எதிர்தரப்பு இளைஞரை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
 

00 Comments

Leave a comment