தமிழ்நாடு

12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் | Tamilnadu Government

தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான பொதுநல வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துகுமார், பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டண விகிதத்தையும் கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்படும் என்றும், அதற்கான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்தனர்.

00 Comments

Leave a comment