தமிழ்நாடு

ஆடு, மாடு, பன்றிகளுடன் கூட்டணி வைக்க திமுக தயாராக உள்ளது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச பேச்சு

ஆடு, மாடு, பன்றிகளுடன் கூட்டணி வைக்க திமுக தயாராக உள்ளது  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச பேச்சு

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆடு மாடு பன்னிகளுடன் கூட்டணி வைக்க தயாராக
உள்ளது உடுமலையில் சீமான் ஆவேச பேச்சு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்க
பொதுக்கூட்டம் தாஜ் திடலில் இன்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி
ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது வருகின்ற
நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கம் போல் தனித்துப் போட்டியிட்டு அபார வெற்றி
பெறுவோம், ஓட்டுக்காக நான் பேசுவேன் இல்லை நாட்டுக்காக பேசுவேன் எந்த
மாற்றமும் இல்லை, மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆடு மாடுகள்
பன்னிகளுடன் திமுக கூட்டணி வைக்க தயாராக உள்ளது என பேசினார், சமூக மாற்றத்தை
மாற்ற முடியாது தமிழ் நாடாக மாற்றுவேன், மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்
சென்னையில் உறுதியா நினைவிடம் கட்டுவேன் அப்பொழுது கலைஞர் சமாதி எங்கு போகும்
என்று எனக்கு தெரியாது, தமிழ் தான் எங்கள் உயிர் மூச்சு உலகம் முழுவதும் தமிழை
பரப்புவோம், இந்தி மொழியை பற்றி கவலை இல்லை தமிழ் மொழி சாதனை படைக்க வேண்டும்
என்பது என் லட்சியம், திராவிடம் என்ற சொல்லுக்கு திமுகவிற்கு அர்த்தம்
தெரியாது, எனவும் நீட் தேர்வு ரத்து கையெழுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கோரி
செங்கலலை வைத்து மேடைகள் பேசுவார்கள் தவிர நேரில் கொடுக்க தைரியம் இல்லை,
சேலம் மாநாட்டுக்கு 58 கோடி 5000 தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்தவர்கள் வெள்ளம்
சேதம் பகுதிகளுக்கு உதவாதது ஏன் மற்றும் மக்களை ஏமாற்றும் கட்சிகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்க பட வேண்டும் ,
குஜராத் மற்றும் காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனையில் அவலம் இந்தியாவே
திரும்பிப் பார்க்க வைத்துள்ளது திமுக மாநாட்டில் மாணவன் படிப்புக்கு
கையேந்தும் நிலை மாற வேண்டும் என்றால் தமிழில் ஆட்சி வேண்டும் உட்பட பல்வேறு
கருத்துக்களை ஆவேசமாக பேசினார்

00 Comments

Leave a comment