news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கணவன் கதையை முடித்த மனைவி
tv

Also Watch

tv

Read this

கணவன் கதையை முடித்த மனைவி

முசாபர்நகர், உத்தரப்பிரதேசம்

30

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வெளியூர் செல்வதாகக் கூறி வீட்டைவிட்டுச் சென்ற கணவன். கணவன் வீட்டைவிட்டு வெளியேறியதும் காதலனை வரவழைத்த மனைவி. ரயிலை தவறவிட்டதால் பாதியிலேயே வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி. மனைவி, வேறொரு இளைஞருடன் தனிமையில் இருந்ததை நேரில் பார்த்த கொடுமை. அடுத்து சில நாட்களில் நடந்த பகீர் சம்பவம் என்ன? காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய கொடூர மனைவி சிக்கியது எப்படி?

* முட்புதர்களுக்கு நடுவே கிடந்த ஆண் சடலம்
* சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை
* சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிவந்த உண்மை


ரோட்டோரத்துல உள்ள முட்புதர்களுக்கு நடுவுல ஒரு ஆண் சடலம் கிடக்குறதா போலீஸுக்கு தகவல் வந்துருக்கு. உடனே சம்பவ இடத்துக்கு போன காவலர்கள், அந்த சடலத்த கைப்பற்றி போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சிட்டு விசாரணையில இறங்குனாங்க. மருத்துவப் பரிசோதனையில அந்த நபர யாரோ, துணியாலயோ, இல்ல கயிறு வச்சோ கழுத்த நெரிச்சு கொன்னுருக்குறது உறுதியாகிருக்கு. அந்த நபர் யாரு? அவர கொலை பண்ணது யாரு? சடலம் எப்படி இங்க வந்துச்சுன்னு ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துச்சு. அந்த நேரத்துலதான், சடலம் கிடந்த புதர்களுக்கு பக்கத்து தெருவுல இருந்து ஒரு சிசிடிவி காட்சி போலீஸ் கையில சிக்கியிருக்கு. அந்த சிசிடிவியில, பிப்ரவரி 14ந் தேதி நைட்12.30 மணிக்கு, ஒரு பைக்ல மூணு பேரு போய்ட்டு இருந்துருக்காங்க. பைக்க ஓட்டுனது ஒரு இளைஞர், நடுவுல ஒரு இளைஞர், பேக் சீட்டுல ஒரு பொண்ணு உக்காந்திருந்துருக்காங்க. ஆனா, கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், அதே பைக் திரும்பி வந்தப்ப, அதுல ரெண்டு பேர் மட்டும்தான் இருந்துருக்காங்க. நடுவுல உக்காந்திருந்த ஆள காணும். இந்த விஷயம் போலீஸுக்கு உறுத்தல ஏற்படுத்தியிருக்கு. அந்த சிசிடிவி காட்சிய துருப்புச்சீட்டா வச்சு விசாரணைய நகர்த்துனதுக்கு அப்புறம்தான், மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிச்சிருக்கு.

* 2017ஆம் ஆண்டு நடந்த மீனாட்சி - சந்தீப் திருமணம்
* சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த மனைவி மீனாட்சி
* மீனாட்சிக்கு, கெளதமுடன் ஏற்பட்ட தகாத உறவு

உத்திரப் பிரதேசம் மாநிலம், முசாபர்நகர சேர்ந்த மீனாட்சிக்கும், சந்தீப்புக்கும் 2017-ல கல்யாணமாகி, இப்ப அவங்களுக்கு ஆறு வயசுல ஒரு மகன் இருக்கான். பல ஊர்களுக்கு டூர் போறது, அங்க விதவிதமா ஃபோட்டோ வீடியோ எடுத்து போஸ் போடுறதுன்னு மீனாட்சி சோஷியல் மீடியாவுல ரொம்ப ஆக்டிவா இருந்துருக்காங்க. இந்த சூழல, மீனாட்சி வீடியோ ஷூட்டுக்காக பக்கத்து கிராமத்துக்கு போய்ருந்தப்ப, கெளதம்ங்குறவரோட பழக்கம் ஏற்பட்டிருக்கு. அப்பதுல இருந்து, மீனாட்சியும், கெளதமும் சேர்ந்து ரீல்ஸ் எடுத்து வீடியோ போஸ்ட் பண்ணிட்டு இருந்துருக்காங்க. அதுலதான், ரெண்டு பேத்துக்கும் நடுவுல நெருக்கம் ஏற்பட்டு, திருமணத்த மீறுன உறவா மாறிருக்குது.

* அடிக்கடி வெளியூருக்கு சென்று வந்த மனைவி மீனாட்சி
* கெளதமுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்து பதிவிட்ட மீனாட்சி
* மனைவி மீனாட்சியிடம் பலமுறை சண்டையிட்ட சந்தீப்


மகன கூட கவனிக்காம, எந்நேரமும் இன்ஸ்டாகிராம் செல்போனையே நோண்டிட்டு இருந்துருக்காங்க மீனாட்சி. அதுவும் இல்லாம, அடிக்கடி ஃபோட்டோஷூட், வீடியோ ஷூட்னு வெளியூருக்கு போய்ட்டு ரெண்டு மூணு நாள் கழிச்சுதான் வீட்டுக்கே வருவாங்களாம். நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா, குடும்பம் என்னாகும், பையனோட வாழ்க்கை என்னாகும்னு கேட்டு சந்தீப், மீனாட்சிய சத்தம் போட்டுருக்காங்க. அதோட, கெளதம்கூட மீனாட்சி ரொம்ப நெருங்கிப்பழகுறது ஆரம்பத்துல இருந்தே சந்தீப்புக்கு பிடிக்கல. கெளதம் கூட பேசாத, பழகாத, வீடியோ போஸ்ட் பண்ணனும்னா நீ மட்டும் தனியா ரீல்ஸ் பண்ணி வீடியோ போடு, எதுக்கு அவன் கூட சேந்து வீடியோ போடுறன்னு கேட்டு பலமுறை சண்ட போட்டுருக்காரு. ஆனா. அதெல்லாம் துளியும் கண்டுக்காம, தன் இஷடம் போல கெளதம் கூட ரீல்ஸ் போடுறது, வெளியூர் போறதுன்னு ஜாலியா இருந்துருக்காங்க மீனாட்சி.

* பணி நிமித்தமாக வெளியூருக்கு புறப்பட்ட கணவர் சந்தீப்
* ரயிலை தவற விட்டதால் பாதியில் வீடு திரும்பிய சந்தீப்
* கெளதம் - மீனாட்சி தனிமையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி


கணவன் மட்டுமில்ல, ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து மீனாட்சிக்கு அட்வைஸ் பண்ணிருக்காங்க. ஆனா, அந்த அட்வைஸெல்லாம் மீனாட்சி ஒரு பொருட்டாவே மதிக்கல. இந்த சூழல்லதான், வேலை விஷயமா வெளியூர் போறதா சொல்லி சந்தீப் வீட்டவிட்டு கிளம்பிருக்காரு. ஆனா, ட்ரெயின மிஸ் பண்ணிட்டதால பாதியிலேயே வீட்டுக்கு திரும்பியிருக்காரு. வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சதுமே அங்க கெளதமோட சத்தம் கேட்டுருக்கு. என்ன இதுன்னு சந்தேகத்துலேயே பெட்ரூம்குள்ள போய் பாத்தா, அங்க மீனாட்சியும், கெளதமும் கணவன் - மனைவி போல தனிமையில இருந்துருக்காங்க. இத்தன நாளா சந்தேகப்பட்டது சரியா போச்சுன்னு சொல்லி, ஆத்திரத்தோட உச்சிக்குப்போன சந்தீப், மனைவி மீனாட்சியையும், கெளதமையும் சரமாரியா அடிச்சிருக்காரு.

* கெளதமிடம் பேச முடியாமல் தவித்த மனைவி மீனாட்சி
* கணவர் சந்தீப்பை முடிக்க திட்டம் போட்ட மீனாட்சி
* உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து...


அதுக்குப்பிறகு, கொஞ்ச நாள் கெளதம் கூட பேச முடியாம தவியா தவிச்ச மீனாட்சி, காதலுக்காக கணவனையே கொலை செய்ய திட்டம் போட்டுருக்காங்க. அதுக்காக, சம்பவத்தனைக்கு மதுபோதையில வீட்டுக்கு வந்த கணவன் சந்தீப்புக்கு சாப்பாட்டுல தூக்க மாத்திரைய மிக்ஸ் பண்ணி கொடுத்திருக்காங்க. அத சாப்பிட்ட கொஞ்ச நேரத்துலேயே, சந்தீப் மயக்கம் போட்டு கீழ விழுந்துருக்காரு. அதுக்கப்புறம், காதலன் கெளதமுக்கு ஃபோன் பண்ணி வீட்டுக்கு வரவச்சு சந்தீப்போட கழுத்த கயிறால இறுக்கி துடிக்க துடிக்க கொன்னுருக்காங்க. இதெல்லாம் நடந்தது பிப்ரவரி 14-ந் தேதி நைட்டு 10 மணிக்கு. சடலத்த இப்ப வெளிய எடுத்துட்டு போனா மாட்டிருவோம்னு நினச்சு, நைட் வரைக்கும் வெயிட் பண்ணிருக்காங்க.

* சடலத்தை பைக்கில் எடுத்து சென்று வீசிய கொடூரம்
* மீனாட்சியையும், கெளதமையும் கைது செய்த போலீசார்


12 மணி ஆனதும், கெளதமோட பைக்ல சந்தீப்போட சடலத்த தூக்கிட்டு போக பிளான் பண்ணிருக்காங்க. கெளதம் பைக்க ஓட்ட, நடுவுல சந்தீப் சடலத்த வச்சிக்கிட்டு, பின் சீட்டுல மீனாட்சி உக்காந்திருந்துருக்காங்க. வீட்டுல இருந்து அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல உள்ள புதருக்குள்ள சந்தீப்போட சடலத்த வீசிட்டு, திரும்ப வீட்டுக்கு வந்திருக்காங்க. சொந்தக்காரங்க யாராவது சந்தீப்ப பத்தி கேட்டா, அவர் வேலை விஷயமா வெளிய போய்ருக்குறதா சொல்லி சமாளிச்சிருக்காங்க. மூணு நாளைக்கு அப்புறம் புதருக்குள்ள இருந்து சந்தீப்போட சடலத்த போலீஸ் மீட்டதுக்கு அப்புறம்தான், மொத்த விஷயமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. அதுக்கப்புறம், கொலையாளி மீனாட்சியையும், கெளதமையும் கைது செஞ்சு சிறையில அடைச்சிட்டாங்க.

Related Link
பணத்தை திருப்பி கேட்டதால் சம்பவம்

பணத்தை திருப்பி கேட்டதால் சம்பவம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
9 hrs 30 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved