news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஜனாதிபதிக்கு பிரதமர், முதல்வர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து
tv

Also Watch

tv

Read this

ஜனாதிபதிக்கு பிரதமர், முதல்வர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திரவுபதி முர்மு பிறந்த தினம்

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜனாதிபதிக்கு பிரதமர், முதல்வர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறி இருப்பதாவது;
துணிச்சல், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவையில் தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றை கொண்ட அவரது பயணம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. பொது வாழ்வில் பல ஆண்டுகளாக, நாட்டிற்குச் சிறப்பான சேவையாற்றியுள்ளார். பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலை மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. நாட்டுக்கு சேவையாற்றுவதில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான ஆயுளைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஒடிசாவில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அவரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறி இருப்பதாவது;
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் இந்திய திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் விஜய் கூறி உள்ளார்.

மக்களுக்கு ஓர் உத்வேகம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
எளிய தொடக்கத்தில் இருந்து குடியரசு தலைவர் ஆனது வரை திரௌபதி முர்முவின் பயணம் மக்களுக்கு ஓர் உத்வேகமாக விளங்குகிறது. அவரது பொது வாழ்க்கை பணிவு, விடாமுயற்சி மற்றும் அமைதியான வலிமையால் நிறைந்து உள்ளது.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Link
EPFO பணம் Gpay-வில் வரப்போகுது - எப்படி தெரியுமா?

EPFO பணம் Gpay-வில் வரப்போகுது - எப்படி தெரியுமா?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 22062026

3
44 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 22062026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved