news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews EPFO பணம் Gpay-வில் வரப்போகுது - எப்படி தெரியுமா?
tv

Also Watch

tv

Read this

EPFO பணம் Gpay-வில் வரப்போகுது - எப்படி தெரியுமா?

UPI-ல் வரும் EPFO பணம்

4

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Untitled-1

EPFO 3.0: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO கணக்காளர்கள் விரைவில் UPI செயலிகள் மற்றும் EPF-ல் இணைக்கப்பட்ட ATM மூலம் தங்களது PF (Provident Fund) பணத்தை எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்து இருக்கிறார்.

 பிஎஃப் கணக்குதாரர்கள் தங்களின் அவசர தேவைக்கான பணத்தை பெற இபிஎஃப்ஓ போர்ட்டலில் விண்ணப்பித்து வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. தொழிலாளர்களின் இந்த சிக்கலை புரிந்து கொண்ட மத்திய அரசு, EPFO 3.0  திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அறிவித்தது. அதன்படி இனி பிஎஃப் பணத்தை பயனாளர்கள் யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கலாம் என கூறப்பட்டது. 

இந்த நிலையில் NDTV வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய சேவை ஜூன் மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதாவது தேசிய கட்டண கழகமான NPCI உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் புதிய வசதிக்கான சோதனைகள் ஏற்கனவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சேவையின் மூலம் பயனர்கள், தங்களது இபிஎஃப் கணக்கில் உள்ள தொகையில் 75 சதவீதம் வரை உடனடியாக யுபிஐ வழியாக வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம். இதுமட்டுமில்லாமல் யுபிஐ வசதி கொண்ட ஏடிஎம் மூலமும் பணத்தை பெற்று கொள்ளலாம். இந்த சேவையை எளிதாக பெற ஜூன் மாதத்திற்குள் யுஏஎன், யுபிஐ ஐடி இருக்கும் மொபைல் எண், வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்து வைத்து கொள்வது அவசியமாகிறது. எல்லாம் சரியாக இருந்தால் திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன், அவசர தேவைக்கான பிஎஃப் பணத்தை காத்திருக்காமல் எடுத்து கொள்ள முடியும். 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவிரி உரிமையை விட்டுத்தர மாட்டோம், மேகதாது அணை திட்டத்தை தடுப்போம்

9
11 mins agoshare
காவிரி உரிமையை விட்டுத்தர மாட்டோம், மேகதாது அணை திட்டத்தை தடுப்போம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved