Also Watch
Read this
By: Manigandan Raja

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 57 பழங்குடியின மலைவாழ் மக்கள் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்களது முன்னோர் காலத்தில் இருந்து தற்போது வரை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பழங்குடியின கிராம மக்களுக்கு வீடுகள், சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில் ஒரு சில மலை கிராமங்களுக்கு தற்போது சில அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆனைமலை அடுத்த டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள எருமை பாறை பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் வசதி இல்லாததால் யானை சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் நடமாடும் அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பின்றி நடந்து சென்று அங்கு சிறிய குட்டைகளில் தேங்கி நிற்கும் வனவிலங்குகள் அருந்தும் தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்துவதாகவும் அதுவும் அந்த தண்ணீரை வனவிலங்குகள் அருந்தும் பொழுது அவை உள்ளே இறங்கி அசுத்தம் செய்வதால் இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் துணிகளால் வடிகட்டி எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த அடர்ந்த வனப் பகுதியில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும்
பொழுது பாதுகாப்பில்லாமல் அடிக்கடி யானை கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்க வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் பலமுறை அரசுத்துறை அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை செய்து தரக்கோரி மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved