Also Watch
Read this
By: Manigandan Raja

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட வின்னமங்கலம் பெரிய ஏரிகள் திருக்கோவிலூர் வருவாய்த்துறை மற்றும் போலீசார் உதவியுடன் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மூன்று ஜேசிபி இயந்திரம் பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் வண்டல் மண் கொள்ளையில் ஈடுபட்டு ரியல் எஸ்டேட் உள்ளிட்ட கட்டுமான தொழிலுக்கு வண்டல் மண் விற்பது தெரியவந்தது,
அங்கு சென்று வீடியோ பதிவு செய்த போது உரிய அனுமதி இல்லாததால் அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பணம் வழங்கிவிட்டு சட்ட விரோதமாக வண்டல் மண் கொள்ளையில் பட்ட பகலில் ஈடுபட்டது தெரியவந்தது,
வீடியோ எடுப்பதை அறிந்து ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரியுடன் அவர்கள் தப்பி ஓடி விட்டனர், திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் முழுவதும் வண்டல் மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் இருப்பதோ ஒரு சில ஏரிகள் என்பதால் அதையும் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஈடுபட்டு வருவது விவசாயிகள் மத்தியில் வெறும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved