Also Watch
Read this
By: Manigandan Raja

திருநெல்வேலி தூத்துக்குடி நான்கு வழி சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு செல்பவர்களும், துறைமுகத்துக்கு செல்லும் கனரக வாகனங்களும், துறைமுகத்தில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.
இந்த நான்குவழிச்சாலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வசவப்பபுரத்தில் இருந்து முறப்பநாடு வரையிலும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் மிகவும் தொய்வாக ஆமை வேகத்தில் நடந்து வருவதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக அதிக அளவு காற்று அடிக்கும் நேரத்தில் சாலைப் பணிக்காக கொட்டப்பட்டுள்ள நிலக்கரி சாம்பலம் பறக்கும் நேரத்தில் வாகன ஓட்டிகள் முகத்தில் இந்த சாம்பல் விழுகிறது. இதனால் கடும் சிரமத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே விரைந்து சாலை பாலப்பணிகளை முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.