news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கஞ்சா, குட்கா விற்பனை செய்ததாக 8 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

கஞ்சா, குட்கா விற்பனை செய்ததாக 8 பேர் கைது

திருவாரூர்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குட்கா

திருவாரூர் மாவட்டத்தில் ஒடிசா மற்றும் சென்னையிலிருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சில்லறை விற்பனை செய்த எட்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் அழகிரி காலனியை சேர்ந்த அஜய் (24) என்பவரது பெட்டி கடையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பெட்டிக்கடையில் காவல்துறையினர்
அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் திருப்பள்ளி முக்கூடலை சேர்ந்த ஆனந்த் (25) என்பவர் சென்னை துறைமுகத்தில் லாரி ஓட்டுனராக உள்ளார். இவர் ஒடிசா மாநிலத்துக்கு சென்று வரும்போது கஞ்சா வாங்கி வந்துள்ளார், இதனை அஜய்,
வைப்பூரை சேர்ந்த நித்திஷ் (20), வல்லரசு (22) ஆகியோரிடம் விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆனந்த் அஜய் நித்தீஷ் உள்பட நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நான்கு செல்ஃபோன்கள், மூன்றரை கிலோ கஞ்சா மற்றும் 38 கிலோ குட்கா, மோட்டார் பைக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதுபோல் கூத்தாநல்லூரை சேர்ந்த ரிஸ்வான் கான் (22) , கூத்தாநல்லூரை சேர்ந்த முகமது ரிஸ்வான் (20), திருத்துறைப்பூண்டியை அடுத்த பள்ளங்கோயில் பகுதியில் இந்திரஜித் (20) , சந்தோஷ் (22) ஆகிய நான்கு பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதை தெரிந்து கொண்ட போலீசார் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Link
மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிஃபா உலக கோப்பை கால்பந்து 2ஆவது அரையிறுதியில் யார்?

3
10 mins agoshare
பிஃபா உலக கோப்பை கால்பந்து 2ஆவது அரையிறுதியில் யார்?








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau