Also Watch
Read this
By: Manigandan Raja

நாகை முதலாம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடி ஊர்வலம் ஆலயத்தின் வளாகத்தில இருந்து துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.

அப்போது சிறப்புத்திருப்பலி செய்து ஆலயத்தின் முன் உள்ள கொடிமரத்தில் புனிதம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 27ம் தேதி பெரிய அலங்கார தேர் பவனி நடைபெற உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved