Also Watch
Read this
By: Manigandan Raja

ஜூலை 24-ல் திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு :
பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற கதைக் களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
கருப்பு படம் வெற்றி - தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சி :
கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பங்களித்த விநியோகஸ்தர்கள், நடிகர்கள், படக்குழுவினர் மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு 'Dream Warrior Pictures' தயாரிப்பு நிறுவனம் நன்றியை தெரிவித்துள்ளது. திரையரங்கம் மற்றும் ஓடிடி தளத்தில் கருப்பு படத்துக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக மகிழ்ச்சியில் திளைத்துள்ளதாகவும் நிறுவனம் பதிவிட்டுள்ளது.
அடுத்த படங்களுக்கான அப்டேட்டை பகிர்ந்த விஷ்ணு விஷால் :

கட்டா குஸ்தி-2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், தன்னுடைய அடுத்த படத்திற்கான அப்டேட்டை பகிர்ந்துள்ளார். கட்டா குஸ்தி-2 வெளியான பிறகு இருண்ட வானம் படம் வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். தொடர்ந்து 'கனா' இயக்குநர் அருண்ராஜா இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினர்.
ரூ.400 கோடி வசூலை கடந்த ராம்சரணின் 'PEDDI' :

விளையாட்டு கதைக் களத்தை மையமாக கொண்டு ராம்சரண் நடிப்பில் வெளியான 'PEDDI' திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிநடை போடுகிறது. ராம்சரண் நடிப்பில் முன்னதாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் தோல்விப்படமாக அமைந்த நிலையில், 'PEDDI'-யின் வெற்றியால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறதா ஜெயிலர்-2?
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர்-2 திரைப்படம் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. சிம்பு நடிப்பில் உருவாகி வரும் அரசன் திரைப்படம் தீபாவளி ரேஸில் உள்ள நிலையில், ஜெயிலர்-2 தீபாவளிக்கு வெளியாவது உறுதியானால் அரசனின் வெளியீடு தள்ளிப்போகும் என தெரிகிறது.