news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news விஜய் படமா? உதயநிதி படமா? தங்கம் தென்னரசு மகள் கொடுத்த 'Twist'
tv

Also Watch

tv

Read this

விஜய் படமா? உதயநிதி படமா? தங்கம் தென்னரசு மகள் கொடுத்த 'Twist'

தமிழ் திரையுலக கதாநாயகி

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமானவரான முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா, தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ஹார்ட்டின் திரைப்படத்தில்...
அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹார்ட்டின்' திரைப்படத்தின் மூலம் இமயா, தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அடியெடுத்து வைக்கிறார். இந்த படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பிரேமம்' பட புகழ் ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வரும் ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


விஜய்யா? உதயநிதியா?
திரைப்படம் வெளியாக சில தினங்களே இருக்கும் நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இமயாவிடம், செய்தியாளர் ஒருவர், நீங்கள் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் இந்தக் கேள்வியை கேட்கிறேன். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதியும் ஹீரோ தான், அதேபோல இப்போது அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்யும் மாஸ் ஹீரோதான். நீங்கள் இதில் யாருடைய படங்களை விரும்பிப் பார்ப்பீர்கள்? உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? என்று கேட்டார்.

நான் தீவிர ரசிகை...
இந்த கேள்விக்கு நடிகை இமயா சற்றும் பதறாமல், நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை என்று ஒரே வரியில் புன்னகையோடு பதிலளித்தார்.

மேலும், ஆரம்பத்தில் சினிமாவிற்குள் நுழைவதில் தன் குடும்பத்தில் யாருக்குமே சுத்தமாக விருப்பமில்லை. சினிமாவுக்குப் போயிடவே போயிடாதே' என்று தான் என்னிடம் சொன்னார்கள். ஆனால், எனக்குள் இருந்த நடிப்பு ஆர்வத்தால் நான் தொடர்ந்து பல வருடங்களாக முயற்சி செய்து கொண்டே இருந்தேன். என் விடாமுயற்சியை பார்த்துவிட்டு, நடிக்க அனுமதி கொடுத்தார்கள் என இமயா கூறி உள்ளார்.

Related Link
இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்

இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

2
32 mins agoshare
ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved