Also Watch
Read this
By: Manigandan Raja

எம்பாப்பே இதுவரை 58 கோல்கள் அடித்து அசத்தல் :
பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பே அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். FIFA உலக கோப்பையில் செனகல் அணிக்கு எதிராக 2 கோல் அடித்தார். பிரான்ஸ் அணிக்காக மொத்தம் எம்பாப்பே 58 கோல்களை அடித்துள்ளார். 2011 முதல் 2024 வரை பிரான்ஸ் அணிக்காக விளையாடிய ஆலிவர் ஜிரூட் ((Olivier Giroud))மொத்தம் 57 கோல்கள் அடித்து, முதலிடத்தில் இருந்த நிலையில், அந்த சாதனையை எம்பாப்பே முறியடித்துள்ளார்.
துனிசியா அணியின் பயிற்சியாளர் மாற்றம் :

பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் துனிசியா((Tunisia)) அணி தனது முதல் போட்டியில் சுவீடன் அணியிடம் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த அணியின் பயிற்சியாளரான சப்ரி லாமோச்சி((Sabri Lamouchi)) அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய பயிற்சியாளராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹெர்வ் ரெனார்ட் ((Hervé Renard)) நியமிக்கப்பட்டுள்ளார்.
2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை :

2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பின் அவருக்கு அணியில் வாய்ப்பளிக்க பிசிசிஐ மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved