news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மன நிறைவை தந்த சட்டப்பேரவை கூட்டம் - ஆளுநர் பெருமிதம்
tv

Also Watch

tv

Read this

மன நிறைவை தந்த சட்டப்பேரவை கூட்டம் - ஆளுநர் பெருமிதம்

சரித்திர நிகழ்வு என பதிவு

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டப்பேரவையில் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது சரித்திர நிகழ்வு என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பெருமிதம் தெரிவித்து உள்ளார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறுமின்றி சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்டது மன நிறைவைத் தருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சியின் முதல் கூட்டம்
தமிழகத்​தின் 17ஆவது சட்​டப்​பேர​வைக் கூட்டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது. ஆளுநர் உரை முடிந்த பின்னரும் தேசிய கீதம் மீண்டும் இசைக்கப்பட்டது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் தமது சமூக வலை தள பதிவில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 3 ஆண்டுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது.

தேசிய கீதம், சரித்திர நிகழ்வு
முதல் முறையாக, சட்டசபையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்து உள்ளது என்றால் அது மிகையல்ல.

முன் உதாரணமான அரசு
ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை பூர்த்தி செய்வதையே ஒரு நிலையான, முன் உதாரணமான அரசானது தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கி உள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது.
இவ்வாறு ஆளுநர் அர்லேகர் தெரிவித்து உள்ளார்.

Related Link
சட்டப்பேரவை 3 நாள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு

சட்டப்பேரவை 3 நாள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

0
4 mins agoshare
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved