news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
tv

Also Watch

tv

Read this

ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

PM Modi

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான பணிகளும் விரைவாகும் :

இந்தியாவுடனான வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு இறுதிக்குள் முறைப்படி கையெழுத்திடப்படும் என ஐரோப்பிய யூனியன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிரான்சில் பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன், கவுன்சில் தலைவர் அன்டோனியா கோஸ்டா ஆகியோர் சந்தித்து பேசினர்.

பின்னர், உர்சுலா வெளியிட்டுள்ள பதிவில், இந்தாண்டு இறுதிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் எனவும், முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான பணிகளையும் விரைவாக செயல்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மிகவும் அழகானவர், தேவதை போன்றவர் :

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்கு பிறகு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி மிகவும் அழகானவர் என புகழ்ந்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மோடி மிகவும் அழகான மனிதர், ஒரு தேவதையை போன்றவர் எனவும், அதேசமயம், பேச்சுவார்த்தையில் மிகவும் கடினமானவர் எனவும் தெரிவித்தார். இதனால்தான் மோடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகவும், இப்படிப்பட்ட மனிதர்கள் வெகு சிலரே உள்ளதாகவும் கூறினார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி :

இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எவியனில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசியவதாகவும், சமீப காலங்களில் இந்தியாவும், உக்ரைனும் பரவலான உறவை கொண்டுள்ளதாகவும், இது தங்கள் ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில் பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் நிற்கும் என்பதையும், மனிதாபிமான அம்சங்களுக்கே முன்னுரிமை அளிக்கும் என்பதையும் மீண்டும் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

Related Link
மம்மியில் தயாரிக்கப்பட்ட ரொட்டி - ஷாக் ரிப்போர்ட்

மம்மியில் தயாரிக்கப்பட்ட ரொட்டி - ஷாக் ரிப்போர்ட்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் கார் ஓட்டுநர்

0
9 mins agoshare
கார் ஓட்டுநர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved