Also Watch
Read this
By: Manigandan Raja

நமது கல்வி முறையால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் :
நமது கல்வி முறையால் குழந்தைகளுக்கு நெருக்கடியும், மன அழுத்தமும் ஏற்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாததே நமது கல்வி அமைப்பில் உள்ள குறைபாடு என்றார்.
TMC-ஐ போல சமாஜ்வாதியிலும் பிளவு ஏற்படப்போகிறது :

திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா ஆகிய கட்சிகளை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியிலும் பிளவு ஏற்பட உள்ளதாக, அம்மாநில அமைச்சரும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் தெரிவித்துள்ளார்.
தங்களை பாஜகவில் சேர்த்துக் கொள்ளும்படி அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்புள்ளதால் காங்கிரஸ் பரபரப்பு :

ஜார்க்கண்ட், மிஸோரமில் இன்று மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 27 இடங்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் 24 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், ஜார்க்கண்டில் 2 இடங்களுக்கும், மிஸோரமில் ஓரிடத்துக்கும் போட்டி எழுந்ததால், இரு மாநிலங்களிலும் இன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved