Also Watch
Read this
By: Manigandan Raja

வேலூர் மாவட்டம், உள்ளாட்சி தேர்தலுக்காக பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து வேலூர் மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்ட 1120 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1230 வாக்குப்பதிவு இயந்திரங்களை மண்டலம் இரண்டு, சத்துவாச்சாரி பகுதி 3- ல் உள்ள அரசு சமுதாய கூடத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, இயந்திரத்தோடு வந்த லாரியை தடுத்து நிறுத்தி சமுதாய கூட கேட்டை மூடி வள்ளலார் பகுதி மூன்று குடியிருப்போர் நற்பணி கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பயன்படுத்தி வரும் சமுதாய கூடத்தை மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும், இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி ஆர்பாட்டம்.
சத்துவாச்சாரி காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வேலூர் வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை வெளியே கொண்டு வந்து விடுவோம் அதற்குப் பின்பு இந்த சமுதாயக்கூடம் நீங்கள் பழையபடி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வாக்குறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக சமுதாயக்கூடத்தில் வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved