Also Watch
Read this
By: Manigandan Raja

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் :
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய ஜி ஜின்பிங், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் முக்கிய பங்காற்றி வருவதாகவும், இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பனிப்போர் மனநிலையில் இருந்து வெளிவர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்கா முரண்பாடாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு :

போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்து ஆகாது என ஈரான் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் பெரும்பாலான விஷயங்களில் தங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால், பேச்சு வார்த்தையில் அமெரிக்கா முரண்பாடாக நடந்து கொள்வதாகவும், நிலைப்பாடுகளை மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.
எதிரி ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு :

ஹோர்முஸ் ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் குவாசிம் தீவு அருகே எதிரி ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அந்த ட்ரோன், பாரசீக வளைகுடா பகுதிக்கு மேலே சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதனை வீழ்த்துவதற்காக நவீன உள்நாட்டு பாதுகாப்பு சாதனங்களை ஈரானிய படைகள் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு 134 ரோந்து வாகனங்களை வழங்கிய இந்தியா :
சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், இலங்கை போலீசாருக்கு 134 ரோந்து வாகனங்களை இந்தியா மானிய விலையில் வழங்கியுள்ளது. கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் அனுரா குமார திசநாயக முன்னிலையில், இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா, போலீஸ் உயரதிகாரிகளிடம் வாகனங்களை ஒப்படைத்தார்.
பேருந்து மீது மினி பஸ் மோதி விபத்து : 17 பேர் பலி :

பாகிஸ்தானில் பழுதாகி நின்றிருந்த பேருந்து மீது அதிவேகமாக வந்த மினி பஸ் மோதியதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா தலமான ஸ்வாத் பள்ளத்தாக்கு நோக்கி அதிவேகமாக சென்ற மினி பஸ், மர்தான் மாவட்டத்தில் விரைவு சாலையில் பழுதாகி நின்றிருந்த பேருந்தின் பின்புறம் மோதியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved