Also Watch
Read this
By: Manigandan Raja

பாலியல் பலாத்காரம்:
திருவள்ளூர் அடுத்த தாவுத்துக்கான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. 80 வயது மூதாட்டியான கணவனை இழந்த இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று விடியற்காலை 3 மணி அளவில் குடிபோதையில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 80 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது அந்த மூதாட்டி உடனடியாக தான் வீட்டில் வைத்திருந்த கொம்பால் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அலறி அடித்துக் கொண்டு வீட்டில் இருந்து அந்த வாலிபர் வலி தாங்க முடியாமல் தப்பித்து ஓடியுள்ளார்.
அவர் ஓடும்போது கையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்துவிட்டது. ஆனால் அவர் அந்த செல்போனையும் எடுக்காமல் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து மூதாட்டி உறவினர்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் வீட்டிற்கு வந்த நிலையில், செல்போனை தவறிவிட்டு சென்ற அந்த இளைஞர் வருவதை அறிந்த உறவினர்கள் மறைந்திருந்தனர்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர்.. இது குறித்து 80 வயது மூதாட்டி திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் சேலை கிராமத்தை சேர்ந்த பாளையம் மகன் குமரேசன் (35) என்பதும், பெயிண்ட்டரான இவர் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய
முயன்றதும் தெரிய வந்தது.
இதனைடுத்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் குமரேசனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved