news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பேருந்து நிலைய வளாகத்திலேயே இயங்கி வரும் டாஸ்மாக் கடை
tv

Also Watch

tv

Read this

பேருந்து நிலைய வளாகத்திலேயே இயங்கி வரும் டாஸ்மாக் கடை

திண்டுக்கல்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மூடப்படாத டாஸ்மாக் கடைகள்

இயங்கி வரும் டாஸ்மாக் கடை :

பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுமாறு முதல்வர்
சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் மொத்தம் இருந்த 4,765 கடைகளில், இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளன. எஞ்சிய கடைகளை மூடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாத வகையில், அருகில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் அலுவலகப் பணிகளில் மாற்றுப்பணி வழங்கப்பட்டு வருகிறது.


இந்திரலையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே 4 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலைய வளாகத்திலேயே ஒரு டாஸ்மாக் மதுக்கடையும் இருந்தது.

இந்த நிலையில் முதலமைச்சரின் உத்தரவை அடுத்து ஸ்டான்லி காட்டேஜ் மற்றும் குறிஞ்சி ஆட்சி அருகே இருந்த இரண்டு மது கடைகள் மூடப்பட்டன.

ஆனால் பேருந்து நிலைய வளாகத்திலேயே செயல்பட்டு வரும் டாஸ்மாக் எம்ஜிஆர் சிலை அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் இதுவரை மூடப்படவில்லை.

முதல்வரின் உத்தரவு வெளிவந்தவுடன் இருக்கும் சரக்குகளை விற்றுவிட்டு கடை மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் மதுபானங்கள் இறக்கப்பட்டு அங்கு 10 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது
பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. எனவே விரைந்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோரிக்கையை விடுகின்றனர் திண்டுக்கல் வாசிகள்.

Related Link
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிய கார்

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிய கார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

80 வயது மூதாட்டிக்கு பா*யல் துன்புறுத்தல்

0
8 mins agoshare
மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved