news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தவெகவின் ஸ்மார்ட் மூவ், பரபரப்பைக் கிளப்பும் ராஜினாமா
tv

Also Watch

tv

Read this

தவெகவின் ஸ்மார்ட் மூவ், பரபரப்பைக் கிளப்பும் ராஜினாமா

அதிமுக MLAக்களின் தேர்தல் பாதை

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவை சேர்ந்த 2 பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அதிமுகவில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல் உள்பட மூவர் நடந்து முடிந்த தேர்தலில் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

அதிமுக அதிருப்தி அணி
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், எஸ்.ஜெயக்குமார், பி.சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து உள்ளனர்.

முன்னாள் எம்பி மரகதம் குமரவேல்
அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்து வந்த மரகதம் குமரவேல், 2014 மக்களவை தேர்தலில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

7,194 வாக்கு வித்தியாசம்
2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் மதுராந்தகம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான மரகதம் குமரவேல், 2026 சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 69 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்ற மரகதம் குமரவேல், தவெக வேட்பாளர் எழில் கேத்தரின் எழில்மலையை விட 7 ஆயிரத்து 194 வாக்குகள் அதிகம் பெற்று, தமது எம்.எல்.ஏ. பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

பெருந்துறையில் ஜெயக்குமார்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 70 ஆயிரத்து 302 வாக்குகள் பெற்ற எஸ்.ஜெயக்குமார், திமுக வேட்பாளர் என்.டி.வெங்கடாச்சலத்தை விட 9 ஆயிரத்து 693 வாக்குகள் அதிகம் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 சட்டமன்ற தேர்தலிலும், அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அந்த தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கே.கே.சி. பாலுவை விட 14 ஆயிரத்து 507 வாக்குகள் அதிகம் பெற்றார்.

தாராபுரத்தில் சத்யபாமா
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் SC தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 81 ஆயிரத்து 100 வாக்குகள் பெற்ற பி.சத்யபாமா, திமுக வேட்பாளர் இந்திராணியை விட 16 ஆயிரத்து 727 வாக்குகள் அதிகம் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தவெக அரசுக்கு ஆதரவு
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவ்வாறு வாக்களித்தவர்களில் அதிமுக பெண் எம்.எல்.ஏ.க்கள் இருவர் உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து உள்ளனர்.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், ஐயூ.எம்.எல். கட்சி ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி செய்து வரும் நிலையில், தனிப்பெரும்பான்மையை ஏற்படுத்த தவெக முன்னெடுக்கும் ராஜ தந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Related Link
தொடர் அதிர்ச்சியில் அதிமுக, அடுத்து என்னவோ? ஸ்ட்ராங் ஆகிறதா விசில்?

தொடர் அதிர்ச்சியில் அதிமுக, அடுத்து என்னவோ? ஸ்ட்ராங் ஆகிறதா விசில்?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

0
0 min agoshare
பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved