Also Watch
Read this
By: Manigandan Raja

நட்சத்திர ஏரியில் படகுப் போட்டி கோலாகலம் :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை விழா மற்றும் 63 வது மலர் கண்காட்சியானது நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக தினந்தோறும் விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து இன்று நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் படகு போட்டியானது நடைபெற்றது. இந்த படகு போட்டியில் ஆண்கள் பிரிவில் ராஜேஷ்கண்ணா, ஹரிஹரசுதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவில் ஜெசிந்தா, அசந்தா ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் பரிசுகளை வழங்கினார்கள்.
இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved